நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இருவருக்கு உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் – பன்னீர்செல்வம்

Published by
Venu

நல்லாசிரியர் விருதுக்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள இருவருக்கு  எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என்று தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினத்தன்று ஆசிரியர் பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கி சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் தேசிய அளவில் இந்தாண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதிற்காக 45 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இரண்டு மாற்று திறனாளி ஆசிரியர்களும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டது. அதில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது. விழுப்புரத்தில் செஞ்சிக்கு அருகிலுள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் திலீப் என்பவருக்கும், சென்னையில் அசோக் நகரில் உள்ள மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் சரஸ்வதிக்கும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படவுள்ளது. தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் டெல்லி விக்யான் பவனில் வைத்து செப்டம்பர் 5-ம் தேதி விருதினை வழங்குகிறார்.

இந்நிலையில் இது குறித்து தமிழக துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,வளமான மாணவ சமுதாயத்தை உருவாக்கும் மகத்தான பணியாற்றி தேசிய நல்லாசிரியர் விருது- 2020க்கு தமிழகத்திலிருந்து தேர்வாகியுள்ள திரு.திலீப் (சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளி) மற்றும் திருமதி.சரஸ்வதி (சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலைப்பள்ளி) ஆகியோருக்கு எனது உளம்நிறைந்த நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…

26 minutes ago

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

8 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

11 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

13 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

13 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

14 hours ago