நேபாள நாடு காட்மண்ட் பகுதியைச் சேர்ந்த 33 பேர் இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். அப்போது ஆம்னி பஸ் ஒன்றில் கன்னியாகுமரிக்கு வந்து அங்குள்ள சிறபவம்சங்களை பார்வையிட்டனர். பின்னர் அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலத்திற்கு ஆம்னி பஸ்சில் புறப்பட்ட அவர்கள் நள்ளிரவு 1 மணி அளவில் சேலம் – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓமலூர் நரிப்பள்ளம் பகுதியில் சென்று கொண்டிருந்தது போது அருகில் உள்ள கோவில் மண்டபத்தில் தங்கிவிட்டு காலையில் புறப்படலாம் என்று பஸ்சை டிரைவர் எதிர்புற சாலையில் செல்ல திருப்பியுள்ளார். அப்போது பெங்களூருவில் இருந்து கேரள மாநிலத்திற்கு செல்வதற்காக வேகமாக வந்த மற்றொரு தனியார் பஸ் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சென்ற பஸ்சின் நடுப்பகுதியில் பயங்கரமாக மோதியது.
இதனால் பஸ் கவிழ்ந்து பயணிகள் ரத்த வெள்ளத்தில் கதறி துடித்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ்க்கும் தகவல் தெரிவித்தனர். பின்னர் உடனே அங்கு விரைந்து சென்ற காவல்துறை காயம் அடைந்தவர்களை மீட்டனர். இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே நேபாள நாட்டை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்த மற்றவர்களை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் பெண் உட்பட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து, பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. மேலும் படுகாயத்துடன் 20 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் பரப்பரப்பு ஏற்பட்டது, போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…