செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என 3வது நீதிபதி அறிவிப்பு.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான வழக்கு விசாரணை ஜூலை 11, 12ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் அறிவித்துள்ளார். செந்தில் பாலாஜியை கைது எதிர்த்து அவரது மனைவி மேகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இரு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர்.
செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால் மூன்றாவது நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர். இதன்பின், ஆட்கொணர்வு மனு மீது விசாரணை நடத்த 3வது நீதிபதியாக சி.வி கார்த்திகேயன் நியமனம் செய்யப்பட்டார். செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கை எப்போது விசாரிக்கலாம் என்பது குறித்து இன்று முடிவு செய்யப்படும் என முடியவும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் அறிவித்து, வழக்கு வரும் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதன்படி, வரும் 11-ஆம் தேதி செந்தில் பாலாஜி தரப்பு வாதங்களை முன்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் 11ம் தேதி ஆஜராகி வாதாடுகிறார்.
இதுபோன்று 12-ஆம் தேதி அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி வாதாடுகிறார். ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததா? போலீஸ் சட்டவிரோத காவலா என்பது பற்றி விசாரிக்கலாம் என்றும் சிகிச்சை காலத்தை நீதிமன்ற காவல் காலமாக கருத முடியுமா முடியாதா என்பதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் எனவும் நீதிபதி கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வரவிருக்கும் நாட்களில் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது? காற்றழுத்த தாழ்வின் நிலை என்ன என்பது குறித்து வானிலை…
சென்னை : சர்வதேச அளவில், இன்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு தமிழகத்தில் பல…
சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய் ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…
ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…
டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…