நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹெல்த்வாக் சிஸ்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Minister Ma Subramanian

நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹெல்த்வாக் சிஸ்டம் தொடங்கப்பட உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். நவ.4 அன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் 37 மாவட்டங்களிலும் தொடங்கப்படவிருக்கின்ற “நடப்போம், நலம் பெறுவோம்” HEALTH WALK 8 KM நடைபாதையில் மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

இதன்பின் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், நவம்பர் 4ம் தேதி 37 மாவட்டங்களில் ஹத்வாக் சிஸ்டம் தொடங்கப்பட உள்ளது. மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் ஹெல்த்வாக் நடக்கும் இடங்களில் மருத்துவ முகாமும் நடத்தப்படும் என்றார். ஹெல்த்வாக் சிஸ்டம் தொடங்கவுள்ளதால், சென்னை பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் கனரக வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

மழைக்கால முன்னெச்செரிக்கை : 10,000 மருத்துவ முகாம்கள்.! அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.!

அதன்படி, சென்னை பெசன்ட் நகர் அவென்யூ பகுதியில் மாதந்தோறும் முதல் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி முதல் 8 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதசாரிகள், நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் வசதிக்காக கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் கூறுகையில், வடகிழக்கு பருவமழை கடந்த 20ம் தேதி தொடங்கியுள்ளது. இந்த பருவமழை காலத்தில் நோய் பாதிப்பு ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு, 10 வாரங்களில் 10,000 மழைக்கால மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதாவது, தமிழகம் முழுவதும் வரும் 29ம் தேதி முதல் அக்டோபர், நவம்பர், டிசம்பர் என மொத்தமுள்ள 10 ஞாயிற்று கிழமைகளில் வாரம் 1000 மருத்துவ முகாம்கள் வீதம் மொத்தமாக 10,000 பருவகால நோய்கள் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது எனவும் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்