ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பொதுமக்கள் நடக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வண்ணம் ஹெல்த் வாக் எனப்படும் நடைபயண சாலை பயன்பாட்டில் இருக்கும். அதே போல தமிழகத்திலும் உருவாக்கப்படும் என முன்னதாகவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்து இருந்தார். இதனை தமிழக பட்ஜெட்டிலும் தமிழக அரசு அறிவித்து இருத்தது.
இது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று சென்னையில் நடைபெற்ற உடற்பயிற்சி நிகழ்வில் மீண்டும் உறுதிப்படுத்தி பேசினார். அவர் பேசுகையில், நாங்கள் ஒருமுறை ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்று இருந்தோம் . அப்போது அங்கு, 8கிமீ தூரத்திற்கு ஹெல்த் வாக் எனப்படும் நடைபாதை இருந்தது.
பொதுமக்கள் மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் – சென்னை மாநகராட்சி ஆணையர்
இந்த சாலை பற்றி அந்நாட்டு அரசிடம் கேட்டிருந்தோம். அதற்கு அவர்கள். 8கிமீ தூரம் என்பது சராசரி மனிதன் 10,000 அடிகள் நடக்க உதவும் தூரம் ஆகும். இப்படி நடந்தால், அது உடல் நலத்திற்கு , குறிப்பாக இதயத்திற்கு மிக நல்லது. இதனை தெரிந்துகொண்டு உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம்கூறினேன.
உடனடியாக இதற்கு திட்டம் வகுத்து , தமிழகத்தில் உள்ள 38 மாவட்டத்திலும் 8 கிமீ தூரத்திற்கு ஹெல்த் வாக் சாலை அமைக்க பட்ஜெட்டில் குறிப்பிட்டார். எல்லா மாவட்டத்திலும் 8 கிமீ சாலை , சாலை இரு புறத்திலும் மரம் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 1 கிமீ தூரம் ஒருமுறை மக்கள் இளைப்பாறும் பகுதி, அறிவிப்பு பலகை, செல்பி பாயிண்ட், நடைபயணம் மூலம் உடலுக்குள் ஏற்படும் நன்மைகள் குறித்த செய்தி பலகைகள் ஆகியாவை அமைக்கப்பட உள்ளது.
சென்னையில், முத்துலட்சுமி ரெட்டி பார்க் முதல் ஆரம்பித்து ஆல்காட், அன்னை வேளாங்கண்ணி சர்ச், பெசன்ட் நகர் பீச் வழியாக மீண்டும் முத்துலட்சுமி ரெட்டி பார்க் வருவது போல ஹெல்த் வாக் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதனை தமிழக முதல்வர் வரும் நவம்பர் 4ஆம் சனிகிழைமை அன்று துவங்க உள்ளார். அப்போது மாநிலம் முழுவதும் இந்த சாலை திறக்கப்பட உள்ளது. இந்த திட்ட,மானது மக்களை தேடி மருத்துவம் திட்டம் போல மிக பெரிய வெற்றியடையும் எனவும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…