#BREAKING : சுகாதாரத்துறை செயலாளர் பீலா ரஜேஷ் மாற்றம்

Default Image

தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது .

தமிழகத்தின் சுகாதாரத்துறை செயலாளராக இருந்து வந்தவர் பீலா ராஜேஷ்.கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இது தொடர்பான தகவல்களை அவ்வப்போது அளித்து வந்தார்.ஆனால் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வந்த நிலையில் கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு உத்தரவு ஓன்று பிறப்பித்துள்ளது.அந்த உத்தரவில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளார்.தற்போது வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார் பீலா ராஜேஷ்.

பீலா ராஜேஷுக்கு பதில் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் தமிழக சுகாதாரத் துறைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இவர் 2012 – 2019 ஆகிய ஆண்டுகளில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்