வெளி நோயாளிகளை சேர்க்க அஞ்சும் மருத்துவமனைகள் – எச்சரிக்கை கொடுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா அச்சத்தால் மருத்துவமனைகளில் நோயாளிகளை உள்ள எடுப்பதற்கு பயந்து தங்களது மருத்துவமனை நிர்வாகம் மூடிவிட்டது அல்லது வெளி நோயாளிகள் புதிதாக உள்ளே வருபவர்கள் சேர்க்க மறுக்கிறது.
இது குறித்து தகவல் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அவர்களுக்கு தெரிய வந்த நிலையில், தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதாவது வெளி நோயாளிகள் சிகிச்சை அளிக்க மறுக்கும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட மருத்துவமனைகளை தவிர மற்ற மருத்துவமனைகளில் வெளி நோயாளிகள் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.