புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, புதுச்சேரியில் உள்ள இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் கொரோனா நோயாளிகள் மற்றும் மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள வசதிகள் ஆகியவற்றை காண மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
கொரோனா வார்டில் செல்லும்போது பாதுகாப்பு கவச உடைகளை அணிந்து சென்றுள்ளார். அப்போது, கொரோனா முகாமில் தங்கியிருந்த நோயாளிகள் முகாமில் உள்ள கழிவறைகள் சுத்தம் செய்யப்படுவதில்லை என புகார் தெரிவித்தனர்.
உடனடியாக சுகாதாரத்துறை அமைச்சர் கழிவறையை சுத்தம் செய்யும் பொருட்கள் மற்றும் கிருமிநாசினி கொண்டு கழிவறையை சுத்தப்படுத்தினார். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…
புது டெல்லி : மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…