மருந்து கண்டுபிடித்தால் சுகாதாரத் துறையை அணுகலாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்

Default Image

சென்னை கிண்டியிலுள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் உலகளவில் கொரோனா வைரஸ் பரவல் தெடர்பாக கருத்தரங்கம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உலக முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எத்தகைய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர்கள் கையாளும் முறை என்ன என்பதை குறித்து சர்வதேச மருத்துவர்களுடன் கேட்டு தெரிந்துகொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வெழுதவுள்ள மாணவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். இதையடுத்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு மருந்து கண்டுபிடித்தாக சொல்பவர்கள் சுகாதாரத்துறையை அணுகி பரிசோதனை மூலமாக நிரூபித்தால் தக்க அங்கீகாரம் அளிக்கப்படும் எனத் தெரிவித்தார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்