லஞ்சம் வாங்கிய சுகாதார கண்காணிப்பாளர் கைது!
மாணவர்கள் மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவதற்கான சான்று வழங்க லஞ்சம் பெற்றதாக சுகாதார கண்காணிப்பாளர் கைது.
வேலூரில் ரூ.10,000 லஞ்சம் வாங்கிய வட்டார சுகாதார கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்கள் மருத்துவமனைகளில் பயிற்சி பெறுவதற்கான சான்று வழங்க லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனியார் நர்சிங் கல்லுரி முதல்வர் சரண்யாவிடம் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்பு காவல்துறை கைது செய்ததாக தகவல் வெளியகியுள்ளது.