கொரோனா பாதிப்பு விபரங்கள் சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்
கொரோனா பாதிப்பு விபரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆன் வகையில், ஒவ்வொரு நாளும், இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்போரின் விபரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு இறப்பு மற்றும் பரிசோதனைகளை குறைத்து சொல்வதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில்,இதுகுறித்து கூறியசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ‘கொரோனா பாதிப்பு விபரங்களை சுகாதாரத்துறை வெளிப்படைத்தன்மையுடன் வெளியிடுகிறது என்றும், இறப்பு, பரிசோதனைகளை குறைத்து சொல்வதாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆதாரம், புள்ளி விவரத்துடன் விபரங்களை கூற வேண்டும் என்றும், ஆக்கபூர்வமான ,ஆலோசனைகள் கூறினால் அரசு ஏற்கா தயார் என்றும் கூறியுள்ளார்.