புதுச்சேரியில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த நபர்

புதுச்சேரி அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் கொரோனாவை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.இந்தியாவில் கொரோனாவால் 12,759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.420 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா சிகிச்சை பெற்றவர் குணமடைந்துள்ளார்.புதுச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார்.தற்போது அவர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்று தெரிவித்துள்ளது.இதுவரை புதுச்சேரியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025