கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, அக்டோபர் 2-ம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்வைக்க வேண்டும் என்றும், தலைமை ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கட்டாயம் பங்கேற்று இடைநிற்றல், மாணவர் சேர்க்கை, பள்ளி உட்கட்டமைப்பு, மாணவர் பாதுகாப்பு தொடர்பாகவும் கிராம சபைக் கூட்டங்களில் விவாதிக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.