“தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” – ஆதிதிராவிடர் நலத்துறை உத்தரவு!
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.இதில், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.76% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.அதாவது, 7,55,998 மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில்,பிளஸ் 2 தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 5.36% தேர்ச்சி பெற்றனர்.
இதுபோன்று,10-ஆம் வகுப்பில் மொத்தம் 90.7% மாணவ,மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9,12,620 மாணவர்கள் எழுதிய நிலையில்,8,21,994 பேர் தேர்ச்சி பெற்றனர் என அமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில்,தமிழகத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆதிதிராவிடர் நலத்துறை இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளது.காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறிப்பாக,10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ,மாணவர்களிடையே தேர்ச்சி விகிதம் குறைந்தது தொடர்பாக இந்த ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.