மே 14 ஆம் தேதி ரமலான் திருநாள்-தலைமை காஜி அறிவிப்பு..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 14 ஆம் தேதியன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையில் ஒன்றான ரமலான் பண்டிகையின் நோன்பு கடந்த ஏப்ரல் 14-ம் தேதியிலிருந்து தொடங்கியது.சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு,இடையில் தண்ணீர்,உணவு இல்லாமல் மாலை சூரியன் மறையும் வரை நோன்பு இருக்கும் நிகழ்வை ரமலான் மாதத்தின் 30 நாட்களும் இஸ்லாமியர்கள் கடைப்பிடிப்பர்.
இந்நிலையில்,ரமலான் பண்டிகைக்கான பிறை நேற்று தெரியும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் வானில் பிறை தென்படாத காரணத்தினால்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மே 14 ஆம் தேதியன்று ரமலான் திருநாள் கொண்டாடப்படும் என்று அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தலைமை காஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,”சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பிறை தெரியாத காரணத்தினால்,தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ரமலான் திருநாள் பண்டிகையானது வருகின்ற மே 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொண்டாடப்படும்”,என்று கூறியிருந்தார்.