மிஷன் சக்தி திட்டம் பெற்ற வெற்றியை அப்துல்கலாம் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.அப்போது அவர் பேசுகையில்,ராமநவமி நாளன்றி இந்த புனித பூமிக்கு வந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன்.
மிஷன் சக்தி திட்டம் பெற்ற வெற்றியை அப்துல்கலாம் இருந்திருந்தால் பாராட்டியிருப்பார்.அப்துல்கலாம் கண்ட கனவுகளை நாம் நிறைவேற்றி கொண்டிருக்கிறோம்.முன் எப்போதும் இல்லாத அளவில் வறுமையை ஒழிக்க பாடுபடுகிறோம் .சுகாதார துறையில் இந்தியா பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளது.ஆயுஷ்மான் திட்டம் மூலம் 50 கோடி இந்தியர்கள் பயனடைந்துள்ளனர்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நீர் மேலாண்மைக்கு தனி அமைச்சகம், மீனவர்களுக்கான தனி அமைச்சகம் மற்றும் மீனவர்களுக்கும் கிஷான் கிரெடிட் கார்டு வழங்கப்படும் . பாஜகவின் தேர்தல் அறிக்கையில் நீர் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ உதவியுடன் மீனவர்களுக்கு தொழில்நுட்ப கருவிகள் மற்றும் கடலில் மீனவர்களுக்கு உள்ளூர் மொழியிலேயே அறிவிப்பு வழங்கப்படும்.இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த 5 ஆண்டுகளில் துறைமுகங்களின் வளர்ச்சி இரட்டிப்பாக்கப்படும். நாட்டின் அழிவு மனப்பான்மையில் எதிர் அணியினர் இருக்கின்றனர். மேம்பாடு தான் பாஜக கூட்டணியின் குறிக்கோளாக உள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…
ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…
துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…
சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…
சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…