முதல்வரின் இந்த செயலை பாராட்டி நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சில மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. குறிப்பாக, சென்னையில் அதிகமான மழை பெய்ததால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதோடு மட்டுமல்லாமல், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளானது.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று, ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வருகிறார். இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மேற்கொண்டு வருகிறார்.
முதல்வரின் இந்த செயலை பாராட்டி நாகை எம்.எல்.ஏ ஆளூர் ஷ நவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். முன்பதிவில், ‘நேற்று முன்தினம் நாகப்பட்டினம் வந்தார். நேற்று சென்னையில் சுழன்றார். இன்று கன்னியாகுமரி விரைந்தார். 6 மாதத்தில் 5 மாதம் கொரோனா ஒழிப்பில் கழிந்தது. மீதம் மழை வெள்ளத்தில் கரைந்தது. இடரை எதிர்கொண்டு எழுகிறார். ஒவ்வொரு நாளும் ஓயாமல் உழைக்கிறார். களத்தில் நின்று மக்களை காக்கிறார்.’ என பதிவிட்டுள்ளார்.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…