உடல்நிலை ஒத்துழைக்காத போது அரசியலுக்கு அழைப்பது தவறு என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த தனது உடல்நிலை காரணமாக, கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை அறிவித்திருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் அவரது ரசிகர்கள் “வா தலைவா வா” என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கூறி ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் போராட்டத்தை கட்டுப்பாடு, கண்ணியத்துடன் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள் எனவும் கூறியுள்ளார். தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்வில் பங்கேற்காத மக்கள் மன்றத்தினருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுருந்தார்.
இதனைத்தொடர்ந்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், உடல்நிலை ஒத்துழைக்காத போது அரசியலுக்கு அழைப்பது தவறு. அரசியல் விலகலால் ரஜினி மன உளைச்சலில் உள்ளார். அரசியக்கு வரவேண்டாம் என்ற ரஜினியின் முடிவு உடல் நலம் சார்ந்து எடுக்கப்பட்டது. ரஜினி நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற முடிவோடு அவரை நிர்பந்திக்கவேண்டாம். இறுதி முயற்சியாக யாருடைய பின்புலமுமின்றி தன்னெழுச்சியாக ரசிகர்கள் போராடியுள்ளனர். ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார். யாருக்கும் எதிராகவும் குரல் கொடுக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…