யாருக்கும் ஆதரவு தரமாட்டார், யாருக்கும் குரல் கொடுக்க மாட்டார் – தமிழருவி மணியன்

Default Image

உடல்நிலை ஒத்துழைக்காத போது அரசியலுக்கு அழைப்பது தவறு என காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். 

ரஜினிகாந்த தனது உடல்நிலை காரணமாக, கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை அறிவித்திருந்தார். ரஜினி அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. பின்னர் அரசியலுக்கு ரஜினி வரவேண்டும் என்று அவரது வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நேற்று சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் அவரது ரசிகர்கள் “வா தலைவா வா” என்று கோஷமிட்டு போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை என கூறி ரஜினி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்றும் போராட்டத்தை கட்டுப்பாடு, கண்ணியத்துடன் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள் எனவும் கூறியுள்ளார். தலைமையின் வேண்டுகோளை ஏற்று இந்த நிகழ்வில் பங்கேற்காத மக்கள் மன்றத்தினருக்கு நன்றி எனவும் குறிப்பிட்டுருந்தார்.

இதனைத்தொடர்ந்து, காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், உடல்நிலை ஒத்துழைக்காத போது அரசியலுக்கு அழைப்பது தவறு. அரசியல் விலகலால் ரஜினி மன உளைச்சலில் உள்ளார். அரசியக்கு வரவேண்டாம் என்ற ரஜினியின் முடிவு உடல் நலம் சார்ந்து எடுக்கப்பட்டது. ரஜினி நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற முடிவோடு அவரை நிர்பந்திக்கவேண்டாம். இறுதி முயற்சியாக யாருடைய பின்புலமுமின்றி  தன்னெழுச்சியாக ரசிகர்கள் போராடியுள்ளனர். ரஜினி யாருக்கும் ஆதரவு தரமாட்டார். யாருக்கும் எதிராகவும் குரல் கொடுக்கமாட்டார் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்