தொடங்கியது போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டம்… அவதியில் பொதுமக்கள்!

ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புதல், ஓய்வூதிய பண பலன்களை வழங்குதல், அகவிலைப்படியை வழங்குதல் உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தன. இதனால், பேருந்து சேவை பாதிக்கப்படும் என கருத்தில் கொண்டு, கோரிக்கைகள் தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன், அரசு பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது.
இருப்பினும், அரசுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் படிப்படியாக பேருந்துகளை அந்தந்த பணிமனைகளுக்கு எடுத்து சென்றனர்.
இன்று போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு பகுதிகளில் பேருந்துகள் வழக்கமான அளவில் இயக்கப்படவில்லை என்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பேருந்து சேவை பெருமளவு பாதிக்கப்படும் என்ற அச்சம் பயணிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
வேலை நிறுத்த போராட்ட அறிவித்ததை அடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து போக்குவரத்து பணிமனைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக செயல்படுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம், மக்களுக்கு பாதிப்பின்றி தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025