‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி என அமைச்சர் செந்தில் பாலாஜி ட்வீட்.
தானியங்கி முறையில் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருந்த பதிவில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மூலம் மதுபான விற்பனையை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மக்களைப் பற்றி கொஞ்சம் கூட அக்கறை கொள்ளாமல் வருவாயை மட்டுமே கருத்தில்கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பது வெட்கக்கேடானது. மதுவால் ஏற்படும் மரணங்களைப் பெருக்கி, தன் அரசின் மற்றும் தனிப்பட்ட கஜானாவை நிரப்ப, மக்களைக் குறிவைத்து திட்டம் தீட்டி செயல்படும் இந்த அடாவடி அரசை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் திட்டத்தை இந்த விடியா அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த அறிக்கை குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி, கோயம்பேட்டில் ஏற்கனவே செயல்பட்டுவரும் Mall shopகளில் தான் தானியங்கி எந்திரம் நிறுவப்பட்டிருக்கிறதென தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் நேற்றே தெளிவான குறிப்பை வெளியிட்ட பிறகும், ‘உள்ளேன் அய்யா’ என இருப்பை காட்டிக்கொள்ள, உண்மைக்கு மாறாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திரு.பழனிசாமி.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…