வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் அவர் மண்! சீமானுக்கு பேராசிரியர் அருணன் பதிலடி!

வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு தான் பெரியார் மண் என சற்று காட்டத்துடன் பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Professor Arunan

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  பேசிய விஷயம் இன்னும் ஓயாத ஒரு சர்ச்சையாக இருந்து வரும் சூழலில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையிலும், தொடர்ச்சியாக பெரியாரை விமர்சனம் செய்தே பேசி வருகிறார். குறிப்பாக நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” பெரியார் தான் சோறு ஊட்டிவிட்டார் என்று சொல்கிறார்கள். அப்போ முன்னோர்கள் எல்லாம் சும்மாக இருந்தார்களா?

பெண்களை கட்டி வைத்து அவர்கள் சாட்டயாலையே அடித்தார்களா? பெரியார் தான் சீர்திருத்தம் பெரியார் தான் எல்லாமே என்று பேசிவிட்டு இருக்கக்கூடாது. பெரியார் மண் என்று பேசாதீர்கள், இது சேர, சோழ, பாண்டியன் மண்..இது என் மண், தமிழ் மண், எங்களுக்கு பெரியார் இது மண் அல்ல. பெரியாரே ஒரு மண்ணுதான்” என ஆவேசமாக தெரிவித்தார்.

இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அரசியல் தலைவர்கள் பலரும், சினிமாவை சேர்ந்தவர்களும் பதிலடி கொடுக்கு வருகிறார்கள். குறிப்பாக, திமுக அமைச்சர் ஆர்.எஸ்.பாரதி, வைரமுத்து, அமீர் ஆகியோர் பதிலடி கொடுத்திருந்தார்கள். அவர்களை தொடர்ந்து இப்போது பேராசிரியர் அருணன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  “எங்களுக்கு பெரியார் ஒரு மண்” என்கிறார் ஒருவர். வரலாறு தெரியாத தற்குறிகளுக்கு அவர் மண்; தெரிந்தவர்களுக்கு அவர் பொன். இது பெரியார் மண் அல்ல, மூவேந்தர் மண் என்கிறார் ஒருவர். பல்லவர்-சோழர் காலத்தில்தான் பிராமணிய-சமஸ்கிருத ஆதிக்கம் வந்தது.


தமிழருக்கும் தமிழுக்கும் பெரும் கேடு சூழ்ந்தது. அதை எதிர்த்து வலுவான களம் அமைத்தவர் பெரியாரே. வரலாறு தெரியாத அரைவேக்காடுகளின் வாய்ச்சவடாலில் ஏமாற வேண்டாம்” எனவும் சற்று காட்டத்துடன் பேராசிரியர் அருணன் பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்