பெங்களூரில் இருந்து புறப்பட்டு விட்டார்,கண்டிப்பாக நடந்தே தீரும் -மு.க.ஸ்டாலின் பேச்சு
சசிகலா வந்தவுடன் என்ன நடக்கப் போவது என்று தெரியவில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் இருந்து சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை கிளம்பினார்.அதிமுக கொடி பயன்படுத்தக்கூடாது என அதிமுக அமைச்சர்கள் காவல்துறையிடம் புகார் கொடுத்த நிலையிலும் சசிகலா காரில் அதிமுக கொடி பொருத்தப்பட்டது.சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்தது.
பின் தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி அருகே சசிகலா வந்து கொண்டிருந்த காரில் இருந்த அதிமுக கொடி திடீரென அகற்றப்பட்டது. அதிமுக கொடி அகற்றப்பட்ட நிலையில், வேறு ஒரு காருக்கு மாறினார் சசிகலா. ஆனால், அந்த காரிலும் அதிமுக கொடி பொருத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,நான் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு தான் வருகிறேன்.தற்போது பெங்களூரில் இருந்து அதிமுக கொடியுடன் புறப்பட்டு விட்டார். என்ன நடக்கப் போவது என்று தெரியவில்லை, ஆனால் எது நடக்க வேண்டுமோ அது கண்டிப்பாக நடந்தே தீரும் என்று தெரிவித்துள்ளார்.