கட்சி தனக்கு எதிராக உள்ளதாக கருதி வழக்கை தாக்கல் செய்துள்ளார் ஓ.பி.எஸ் – ஈபிஎஸ் தரப்பு அதிரடி
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார், இருப்பினும் ஒட்டுமொத்த சட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்று ஈபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி, நீதிபதியின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அப்போது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய கூடுதல் மனுக்களை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. எனவே ஜூலை 11ம் தேதி நடைபெறவுள்ள கூட்டத்திற்கு தடை கோரிய இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடத்த எந்த தடையுமில்லை என உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ள நிலையில், பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்றால் மனுதாரகள் உச்சநீதிமன்றத்தைதான் அணுக வேண்டும். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் நீடிக்கிறார், இருப்பினும் ஒட்டுமொத்த சட்சியும் தனக்கு எதிராக உள்ளதாக கருதி ஓ.பன்னீர்செல்வம் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என தெரிவித்துள்ளனர்.