சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, 1,137 கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவன நிர்வாகிகளின் அசையா சொத்துக்களை அடையாளம் காண, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
HBN Dairies என்ற நிறுவனம் நாடு முழுவதும் 20 லட்சம் பேரிடம் முதலீடு பெற்று மோசடி செய்ததாக, ஆவடியைச் சேர்ந்த ஜெயபாரதி என்பவர் அளித்த புகாரின்பேரில், அந்நிறுவன நிர்வாக இயக்குநர் உள்ளிட்ட 7 பேர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்கக் கோரி தொடரப்பட்ட மனு மீது சனிக்கிழமை நடந்த விசாரணையின்போது, போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் ஒரு கோடியே 33 லட்சம் ரூபாய் அளவுக்கு மோசடி செய்யப்பட்டிருப்பதாகவும், இதுவரை 526 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
புகாருக்குள்ளான நிறுவனத்தின் அசையா சொத்துக்களை அடையாளம் காண மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். வழக்கின் விசாரணையை வரும் 23ம் தேதிக்கு அவர் ஒத்திவைத்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…