ஆட்டோ ஓட்டுநரின் அசாத்திய தைரியம்.! சென்னையில் சிக்கிய ரூ.1 கோடி ஹவாலா பணம்.!
சென்னை செங்குன்றம் பகுதியில் இருந்து சென்ட்ரலுக்கு ஆந்திராவை சேர்ந்த யாசிர், தாவுத், பைசல், ஆகியோர் கையில் பெரிய பையுடன் ஆட்டோவில் பயணித்துள்ளனர். இதில் பயணித்த மூன்று பேரின் நடவடிக்கையில் ஆட்டோ ஓட்டுநர் சுந்தராஜ் சந்தேகமடைந்தார்.
இதனை அடுத்து செல்லும் வழியில் யானைகவுனி பகுதி காவல்நிலையத்திற்கு ஆட்டோவை திரும்பியுள்ளார் ஓட்டுநர் சுந்தராஜ். இதனை கண்ட 3 பெரும் காவல்நிலையத்திற்கு அருகில் சென்றவுடன் அங்கு இருந்து வேறு ஆட்டோவில் தப்பி செல்ல முயன்றுள்ளனர்.
இதனை கவனித்த காவல்துறையினர் உடனடியாக அந்த 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதில், அவர்கள் வைத்து இருந்த பையை சோதனை செய்தபோது அதில் ரூபாய் 1 கோடி மதிப்புள்ள ஹவாலா பணம் இருந்துள்ளது. 1 கோடி ரூபாய் வரையிலான ஹவாலா பணத்தை பிடிக்க சாமர்த்தியமாக உதவிய ஆட்டோ ஓட்டுநர் சுந்தராஜை காவல்துறையினர் பாராட்டினர்.
ஹவாலா பண பரிவர்த்தனை என்பது, சட்ட விரோத பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும் பணம் ஆகும். இதன் மூலம் பணம் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கை மாறாது. ஆனால் அதன் மதிப்பில் வெளிநாட்டில் அல்லது வேறு இடத்தில் அந்த பணம் அடையாளம் கூறப்பட்டு அதன் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெறும்.