தர்மபுரியில் விவசாயநிலத்தில் வைக்கப்பட்டு இருந்த மின் வேலி மின்சாரம் தாக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளன.
காட்டுயானைகள் அண்மைக்காலமாக கிராமங்களுக்குள் உள்புகுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில சமயம் அந்த காட்டுயானைகள் விவசாய நிலத்தை சேதப்படுத்தி விடுகின்றன.
தொடர் உயிரிழப்புகள் : இதனால் சிலர் சட்டவிரோதமாக வயல்வெளிகளில் மின்வேலி அமைத்து விடுகின்றனர். அதில் வனவிலங்குகள் சிக்கி பல்வேறு சமயங்களில் உயிரிழந்து விடுகின்றன.
5 காட்டுயானைகள் : அப்படித்தான், தருமபுரி மாவட்டம் மாண்டஹள்ளி அருகே விவசாய நிலையத்தில் வைத்து இருந்த மின்வேலியில் சிக்கி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன. காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் இரண்டு குட்டிகள் உள்ளிட்ட ஐந்து காட்டு யானைகள் விவசாய நிலத்தினை சுற்றிவந்துள்ளன.
எமனாக மாறிய மின்வேலி : அப்போது அங்கு சட்டவிரோதமாக பாதுகாப்புக்காக வைக்கப்ட்டு இருந்த மின் வேலியில் குட்டிகளை தவிர மற்ற யானைகள் இறந்துவிட்டன. தாய் யானை இறந்தது கூட தெரியாமல் இரண்டு குட்டி யானைகளும் சடலத்தை சுற்றி சுற்றி வருகின்றன இது காண்பவரை கலங்கடித்து உள்ளது.
சட்டவிரோதமாக விவசாய நிலத்தில் மின்வேலி அமைத்ததாக கூறி சக்தி மற்றும் முருகேசன் ஆகியரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…