முதல் நாளே கட்டுக்கட்டாக சிக்கிய ஹவாலா பணம்…தேர்தல் விதிகள் அமலுக்கு பின் போலீஸார் அதிரடி.!
Hawala Money: மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் நேற்று அமலுக்கு வந்த முதல் நாளே சென்னையில் கட்டுக் கட்டாக பணம் சிக்கியுள்ளது. ஆம், சென்னை யானைக்கவுனி பகுதியில், தனியார் காம்ப்ளெக்ஸ் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில், ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
READ MORE – நிவாரணத் தொகை என்பது பிச்சை…ஆன்மீகத்திற்கு எதிரான கட்சி ஆளக் கூடாது – நிர்மலா சீதாராமன்.!
சென்னை யானைக்கவுனி பகுதியில் தனியார் அலுவலகம் ஒன்றில் பெரிய அளவில் ஹவாலா பணப்பரிமாற்றம் நடைப்பெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்து, நேற்று இரவு பூக்கடை உதவி ஆணையர் தலைமையில் அமைக்கட்பட்ட தனிப்படை போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
READ MORE – மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்
அப்பொழுது, ஆவணங்கள் இன்றி ரூ.1.42 கோடி பணத்தை வைத்திருந்த யாசர் அராபத், அதனை வாங்க வந்த குணா ஜெயின், மற்றொரு நபரையும் மடக்கி பிடித்தனர். இப்பொழுது, இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் யானை கவுனி போலீசார் ஒப்படைத்தனர். இதனையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவர்களிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
READ MORE – தமிழகத்தில் 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு
தேர்தல் நடத்தை விதிகள் நேற்று முதல் அமலாகியுள்ள நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் வாகனங்களில் போலீசார் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதன்படி, சென்னை யானைக்கவுனி பகுதியில் போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த ரூ.1.42 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதைபோல், ஈரோடு மாவட்டம் குமலன்குட்டையில் பறக்கும்படை நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்ட ரூ.2.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.