ராணுவமும், எல்லைப்பாதுகாப்பு படையும் தீவிரவாதிகளிடம் தோற்றுவிட்டதா? – பீட்டர் அல்போன்ஸ்
ஜம்மு காக்ஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் தலைவர் ராகுல்காந்தி அவர்களது பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதிசெய்யவேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்காக குடிமக்களுக்கு அதிநவீன இயந்திர துப்பாக்கிகளையும் ஆயுதப்பயிற்சியினையும் வழங்குவதற்கு பீட்டர் அல்போன்ஸ் கண்டனம் தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புக்காக குடிமக்களுக்கு அதிநவீன இயந்திர துப்பாக்கிகளையும் ஆயுதப்பயிற்சியினையும் பாஜகவினர் மேற்பார்வையில் BSF வழங்குவது மிகவும் தவறு. ராணுவமும், எல்லைப்பாதுகாப்பு படையும் தீவிரவாதிகளிடம் தோற்றுவிட்டதா?
அனைவரின் கையிலும் இயந்திரத்துப்பாக்கி இருப்பது உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெறும் அச்சுறுத்தல்! ஜம்மு காக்ஷ்மீரில் பாரத் ஜோடோ யாத்திரை செல்லும் தலைவர் ராகுல்காந்தி அவர்களது பாதுகாப்பை ஒன்றிய அரசு உறுதிசெய்யவேண்டும்.’ என பதிவிட்டுள்ளார்.