7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியின் போது, மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்தும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் இந்த இட ஒதுக்கீட்டை வழங்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கிய சட்டம் செல்லும் எனத் தீர்ப்பளித்தனர். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 7.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பு திராவிட மாடல் அரசின் சமூக நீதி பயணத்தின் ஹாட்ரிக் வெற்றி. மருத்துவ படிப்புக்கான அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒபிசிக்கு 27% இடஒதுக்கீட்டை உறுதி செய்தது முதல் வெற்றி.
மருத்துவ மேற்படிப்பில் ஊரக அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசுக்கு 2-ஆவது வெற்றி. சமூகநீதி பயணத்தில் இன்னும் பல காலங்களை உறுதியுடன் எதிர்கொள்வதற்கான ஊக்கத்தை, உத்வேகத்தை அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…