சிறுமி கொலை வழக்கு: தஷ்வந்தின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை !உச்சநீதிமன்றம் உத்தரவு
தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாப்ட்வேட் இன்ஜினியர் பாபு (35), போரூர் அடுத்த மதனந்தபுரத்தை சேர்ந்தவர். இவரது மகள் ஹாசினி (7). இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஹாசினி திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். அதில், பக்கத்து வீட்டில் வசிக்கும் மெக்கானிக் இன்ஜினியர் தஷ்வந்த் (25) என்பவர் ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில் செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் விசாரணையின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால், தஷ்வந்துக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.இதனால் தண்டனைக்கு எதிராக தஸ்வந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.ஆனால் தஷ்வந்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.இதை தொடர்ந்து இவர் மீது தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்குதண்டனை உறுதிசெய்தது.
ஆனால் தஸ்வந்த் தரப்பில் தூக்கு தண்டனையை ரத்து செய்து தண்டனையை குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு,இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை தஷ்வந்திற்கு விதிக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது.மேலும் இது தொடர்பாக தமிழக காவல்துறை 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.