தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமனம் ..!
தமிழ்நாடு அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஹசன் முகமது ஜின்னா நியமனம்.
தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆக ஹசன் முகமது ஜின்னா நியமித்து ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உயர்நீதிமன்ற நீதிபதியின் ஒப்புதல் நடைமுறைக்கு பின் குற்றவியல் வழக்கறிஞர் ஆக ஹசன் முகமது ஜின்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஹசன் முகமது ஜின்னா 1996 முதல் வழக்கறிஞராக உள்ளார். இவர் கண்ணகி சிலை இடிப்பு, கல்லூரி மாணவி ஷரிகாஷா வழக்கில் ஆஜராகியுள்ளார். யுனெஸ்கோவின் ஆசிய-பசிபிக் மண்டல மையத்தின் ஆலோசகர் என பன்முகத்திறமை கொண்டவர் ஆவார்.