#BREAKING : டாஸ்மாக் கடையை எதிர்க்க உரிமை உண்டு – உயர்நீதிமன்றம் அதிரடி ..!

டாஸ்மாக் மதுக்கடையால் பாதிக்கப்படுவோர் கடை அமைப்பதை எதிர்க்க உரிமை உண்டு என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம் கருமலைக்கூடலில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின்போது டாஸ்மாக் கடை மீது கல்வீசி தாக்கியதாக 10 பெண்கள் உட்பட சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ஜெயக்குமார் என்பவர் வழக்குகள் ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். டாஸ்மாக் போராட்டக்காரர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானத்தைப் பெருக்க மதுக்கடைகளை அரசு அமைந்தாலும் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்க உரிமை உண்டு என தெரிவித்தார்.
மேலும், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 95-ன் கீழ் விதிவிலக்கு அளித்து 10 பெண்கள் உட்பட சிலர் மீது தொடரப்பட்ட மீதான வழக்கை ரத்து செய்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024