அமலாக்கத்துறை எந்த ஒரு பாஜக தலைவர்கள் மீதாவது வழக்குப்பதிவு செய்துள்ளதா? ப.சிதம்பரம்
அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சினை என ப.சிதம்பரம் பேட்டி.
இன்று 2-வது நாளாகவும் ராகுல் காந்தியிடம் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனையடுத்து, காங்கிரஸ் முழுவதும் போரட்டம் நடத்தி வருகின்ற்னர்.
இந்த நிலையில், இதுகுறித்து ப.சிதம்பரம் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது, மத்தியில் ஆளும் பாஜக அரசு, சட்டத்தையோ ஜனநாயகத்தை மதிப்பது இல்லை. கடந்த 4,5 ஆண்டுகளில் எந்த ஒரு பாஜக தலைவருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளதா?
சட்டத்தை துச்சமாக மதிப்பதாலேயே நாங்கள் போராடுகிறோம். அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதித்து நடந்தால் எங்களுக்கு சிக்கல் எதுவும் இல்லை. அமலாக்கப் பிரிவு சட்டத்தை மதிப்பது இல்லை என்பதுதான் பிரச்சினை என தெரிவித்துள்ளார்.