தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? என டிடிவி தினகரன் ட்வீட்.
திருச்சி மாவட்டம் நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூமிநாதன். இவர் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் ஆடுகளை திருடிச் சென்ற திருடர்களை பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் திருடனை விரட்டி சென்றதாக கூறப்படும் நிலையில், மர்மநபர்கள் உதவி ஆய்வாளர் பூமிநாதன் இவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது இதில் அவர் காவல் ஆய்வாளரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் நள்ளிரவில் நடந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலில்ன் அவர்கள், உயிரிழந்த உதவி காவல் ஆய்வாளர் பூமிநாதன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு தொகை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து யுடிவி தினகரன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. பூமிநாதன் திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.
ரோந்து பணிக்கு சென்ற திரு.பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.
சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படி கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது’ பதிவிட்டுள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…