தமிழகத்தில்கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது.
இதனால், கடந்த நான்கு மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதும் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து, இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் முறையை முதல்வர் அறிவித்தார். அதன்படி இந்த உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதனால் நேற்று மட்டும் ஒரே நாளில் 1.20 லட்சம் பேருக்கு இ பாஸ் வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
இ-பாஸ் முறை எளிமைப்படுத்தப்பட்ட நிலையில் சென்னை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று மாலை நிலவரப்படி 7500 பேர் சென்னை வந்துள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…