அரசு எடுத்த நடவடிக்கைகளால் சென்னையில் கொரோனா தொற்று குறைந்துள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் கொரோனா சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்தார்.இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அவர் பேசுகையில், கொரோனா பாதித்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ரூ. 136 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.சி.டி. ஸ்கேன், எக்ஸ்ரே போன்ற அதிநவீன வசதிகள் உள்ளது. அறுவை சிகிச்சை, தீவிர சிகிச்சை பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளின் மன அழுத்தம் போக்க பிரத்யேக யோகா மையம்அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்காக 518 அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ,தமிழ்நாடு முழுவதும் 75,000 படுக்கை வசதிகள் உள்ளது.சென்னையில் 17500 படுக்கை வசதிகள் உள்ளது.தேவையான அளவு வென்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளது. கொரோனாவால் குணமடைந்தவர்கள் 57.8 % ஆகும்.சென்னையில் முழு ஊரடங்கு மூலமாக தொற்று குறைந்து வருகிறது . அரசு எடுத்த முடிவுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.தமிழகத்தில் சமூக தொற்று ஏற்படவில்லை.நோயை கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்.சென்னையில் வீடுவீடாக சென்று மக்களை சந்தித்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…