கேடு தரும் கேன் தண்ணீர் – சென்னையில் 45% குடிநீர் பாதுகாப்பற்றது – சென்னை மாநகராட்சி!

Default Image

சென்னையில் விற்பனை செய்யப்படுவதில்லை 45% குடிநீர் பாதுகாப்பற்றது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

முதலில் எல்லாம் குடிநீர் என்றால் குழாய்களில் அல்லது வண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யக்கூடியவற்றை தான் அனைவரும் வாங்கி குடித்து வந்தனர். ஆனால், தற்பொழுது சுத்தமான நீரை குடிக்க வேண்டும் என்பதற்காக கேடு தரக்கூடிய கேன் தண்ணீரை அனைவரும் வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் சென்னையில் விற்க்கப்படக்கூடிய தண்ணீர் கேன்கள், பாட்டில்கள் மற்றும் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் மூலம் தயாரிக்க கூடிய தண்ணீர் ஆகியவற்றில் 187 மாதிரிகளை சென்னை மாநகராட்சி ஆய்வுக்காக அனுப்பி உள்ளது. இதனுடைய தரம் குறித்த முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது ஆய்வுக்காக சேகரிக்கப்பட்ட 187 மாதிரிகளில் 40 மாதிரிகள் குடிப்பதற்கு தரமற்ற தண்ணீர் என்பது தெரிந்துள்ளது.

மேலும் எஞ்சியுள்ள 147 குடிநீர் மாதிரிகளில் முப்பதில் பாக்டீரியா வைரஸ் பரவல் இருப்பதும், 20 மாதிரிகளில் போலியான நிறுவனங்களின் பெயர் சீலுடன் விற்கப்படுவதும் தெரியவந்துள்ளது. இதுபோன்ற தரமற்ற நீரை குடிப்பதால் காலரா, டைபாய்டு போன்ற நோய்கள் நேரிடும் என மருத்துவர்கள் ஏற்கனவே எச்சரித்துள்ள நிலையில், விலை கொடுத்து தண்ணீரை வாங்கக் கூடிய மக்கள் இலவசமாக நோய்களை வாங்கி வருகின்றனர். அதேசமயம் இலவசமாக கிடைக்கக்கூடிய குடிநீர் மூலம் கூட விலை கொடுத்து மருந்துகள் வாங்க வேண்டிய அளவுக்கு நோய்கள் வராது எனவும் தெரிவிக்கின்றனர். எனவே சென்னையில் விற்கக்கூடிய கேன் தண்ணீரில் 40% குடிப்பதற்கு தரமற்றவை என தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்