கலாஷேத்ரா பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட ஹரிபத்மன் நீதிமன்றத்தில் ஆஜர்.!
கலாஷேத்ரா பாலியல் வழக்கில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்.
சென்னையில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும் நடன பேராசிரியர் ஹரி பத்மன், மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டார் என அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டு இருந்தது.
ஹரிபத்மன் ஆஜர்:
இந்த பாலியல் புகாரில் தேடப்பட்டு வந்த கலாஷேத்ரா நடன பேராசிரியர் ஹரி பத்மன் இன்று கைது செய்யப்பட்டார். இப்போது, கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மன், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதாவது, சைதாப்பேட்டை 18-வது நீதிமன்றத்தின் நீதிபதி சுப்ரமணியன் முன்பு பேராசிரியர் ஹரிபத்மன் ஆஜர்படுத்தப்பட்டார்.
டிஸ்மிஸ் நடவடிக்கை:
இதற்கு முன்னர், இந்த விவகாரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர்கள் ஹரிபத்மன், சஞ்சித் லால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணா ஆகியோரை சஸ்பெண்ட் செய்துள்ளதாக கல்லூரி நிர்வாகம் இன்று மாணவர்களிடம் வாய்மொழியாக தெரிவித்தனர்.
போராட்டம் தொடரும் – கலாஷேத்ரா மாணவிகள்
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகளுடனான பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுள்ளது. ஆனால், கலாஷேத்ரா பேராசிரியர்கள் 4 பேரை டிஸ்மிஸ் செய்ததை வாய்மொழியாக தெரிவித்ததை விட, எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்தால் மட்டுமே கல்லூரிக்கு திரும்புவோம், தேர்வுகளை எழுதுவோம் அதுவரை போராட்டம் தொடரும் என கலாஷேத்ரா மாணவிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்னர்.