அடுத்த 24 மணி நேரத்தில் 20 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, விழுப்புரம், சேலம், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி, கரூர், அரியலூர், ஆகிய 20 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக தகவல் அளித்துள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.