திருநெல்வேலி மாவட்டம் கடையம் பகுதியில் உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் என்பவர் தோட்டத்து வீட்டில் இரண்டு முக மூடி திருடர்கள் நுழைந்தார்கள்.அப்போது அதில் இருந்த ஒரு திருடன் சண்முகவேல் கழுத்தில் துண்டு வைத்து நெரித்தார்.
அந்த திருடனிடம் இருந்து தப்பிக்க சண்முகவேல் போராடி கொண்டு இருந்தார்.அப்போது அவரது மனைவி செந்தாமரை வீட்டின் முன் இருந்த செருப்பு , சேர் போன்றவை கொண்டு அந்த திருடர்களை தாக்கினர்.
பின்னர் சண்முகவேல் தப்பித்து கணவர் -மனைவி இருவரும் தங்களிடம் கிடைத்த பொருள்களை கொண்டு அந்த இரண்டு திருடர்களை தாக்கினர்.இந்த காட்சி அவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.அந்த காட்சிகள் இணைத்தளத்தில் வைரலாக பரவியது.
கணவர் -மனைவியின் வீரத்தை பலர் பாராட்டினர்.இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும் , சென்னை அணியின் சுழல் பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ஒரு பதிவு பதிவிட்டு உள்ளார்.
அந்த பதிவில் ” திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனிபகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை “Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers என பதிவிட்டு உள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…