மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்தும் செயல் கடும் கண்டனத்திற்குரியது! – ஓபிஎஸ்
ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு ஓபிஎஸ் அறிவுறுத்தல்.
தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மிக நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது, ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் கட்டணம் செலுத்தும் நாளிலிருந்து 2 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பது குறித்த அவசியத்தை முறையாக எடுத்துரைக்காமல் மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்தும் செயல் கடும் கண்டனத்திற்குரியது. ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
ஆதார் எண்ணை மின் இணைப்புடன்
இணைப்பது குறித்த அவசியத்தை முறையாக எடுத்துரைக்காமல் மின் நுகர்வோர்களை திமுக அரசு துன்புறுத்தும் செயல் கடும் கண்டனத்திற்குரியது!ஆதார் எண் இணைப்பிற்கான கால அவகாசத்தை ஆறு மாத காலம் நீட்டிப்பதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்திடுக! pic.twitter.com/gQ7sLgoOs3
— O Panneerselvam (@OfficeOfOPS) November 26, 2022