காதலர் தினத்தை முன்னிட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு.
காதலர் தினம் என்பது உலகம் முழுவதும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் நாளை பிப்ரவரி 14 காதலர் தினம்.இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள கடற்கரை, பூங்காக்களில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கடையிலும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.காதலர் தினம் தமிழக கலாச்சாரத்திற்கு எதிரானது என கூறி இந்து அமைப்புகள் ஒவ்வொரு ஆண்டும் போராட்டம் நடத்தி வருகின்றன.
இந்நிலையில் கடற்கரை மற்றும் பூங்காக்களில் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்களை பிடித்து திருமணம் செய்து வைப்போம் என இந்து மக்கள் கட்சி அறிவித்துள்ளது.இதனால் ஏதாவது பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த பிரச்சனைகள் ஏதும் நடக்காதவாறு தடுக்க கோரியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் பொது இடங்களில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதை தடுக்கும் வகையிலும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை மெரினா கடற்கரை உட்பட மாநகரத்தின் பல்வேறு இடங்களிலும் உள்ள பூங்காக்களில் காவல்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.இப்பகுதிகளை வரும் காதல் ஜோடிகள் அத்துமீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் காதல் ஜோடிகள் மீது யாரேனும் தாக்குதல் நடத்தி அவர்களுக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க யாரேனும் முயன்றாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…