பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார் கமல்ஹாசன் என முதலமைச்சர் பழனிசாமி கூறிய நிலையில் , கமல்ஹாசன் பதில் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது நடிகர் கமல் ஹாசன் குறித்து விமர்சித்துப் பேசினார்.செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,கமல்ஹாசன் புதிதாக கட்சியில் இணைந்தவர். அவருக்கு என்ன தெரியும். பிக்பாஸ் நடத்துகிறவர் எல்லாம் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்.பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தி,நன்றாக இருக்கும் குடும்பங்களையும் கெடுக்கிறார்.இப்படிப்பட்ட தலைவர்கள் சொல்கின்ற கருத்துக்களை நீங்கள் சொல்லலாமா? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார். மேலும் அவர் கூறுகையில், கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர் அல்ல.நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் அவருடைய வேலை. ஏனென்றால் அந்த டிவி தொடர் பார்த்தால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கெட்டுப் போய்விடுவார்கள்.புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடல்கள் அருமையான பாடல்கள் அது மக்களுக்கு நன்மை பயக்கும் பாடல்கள் என்று கருத்து தெரிவித்தார்.
இந்நிலையில் இதற்கு பதில் அளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,முதல்வரும் பிக்பாஸ் பார்க்கிறார் என்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…