இன்று ஆசிரியர் தினம் கொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை சுகாதாரத் துறை அமைச்சரான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தினமான இன்று பலர் வாழ்த்துக்களை கூறி வரும் நிலையில் சுகாதார துறை அமைச்சரான விஜயபாஸ்கர் அவர்களும் தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, நான்கு சுவர்களுக்குள் தானிருந்து அள்ளக் குறையா அறிவையும் அன்பையும் தந்து பலன் எதிர்பாரா ஆசிரியப் பெருமக்களை நினைவில் நிறுத்தி நன்றியுடன் வாழ்த்துகிறேன். இறைவனுக்கும் முந்திய இடத்தில் இருத்தி வணங்கப்படும் ஆசிரிய பெருமக்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இராணுவ அதிகாரி மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அமரன் திரைப்படம் தீபாவளி…
டெல்லி : 13 மாநிலங்களில் 48 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை இடைத்தேர்தல் முன்னிலை குறித்த நிலவரம் வெளியாகி…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் [நவம்பர் 23] இன்றைக்கான எபிசோடில் ரோகினியை மலேசியாவிற்கு டிக்கெட் போட சொல்லும் விஜயா. .அதிர்ச்சியில் …
தஞ்சை : மாவட்டத்தில் அ.தி.மு.கவின் கள ஆய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணியும், திண்டுக்கல்…
மும்பை : மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எண்ணப்பட்டு முன்னணி நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. இதில் காலை முதலே…
ராஞ்சி : ஜார்கண்டில் மொத்தமாக உள்ள 81 தொகுதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதன்படி, முதல் கட்டமாக கடந்த…