ஹேப்பி நியூஸ்: பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு PT பீரியட்! – தமிழக அரசு அனுமதி!

Default Image

கொரோனனாவால் நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் மீண்டும் தொடங்க அனுமதி.

தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 6 முதல் 9 -ஆம் வகுப்புகள் வரை மீண்டும் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு PT பீரியட் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

முன்னதாக நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் PT பீரியட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth