கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் அரசு பேருந்துகளில் நிவாரணப் பொருட்களை கொண்டு செல்ல கட்டணம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடத்துநர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை நிர்வாகம் சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…
கோவை : நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கள்ளக்குறிச்சி : 22KV குருபீடபுரம் 22KV மலைகொத்தளம் 22KV லட்சியம்…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை…
சென்னை : இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29…