இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு செங்கோட்டையன் பதில்.
ஈரோடு கிழக்குத் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு பிப்., 27ல் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைத் தேர்தலுக்கான பணியில் பிரதான அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த சமயத்தில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், பிப்ரவரி 7 வரை நடைபெற உள்ளது. திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 3ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
தேமுதிக சார்பாக அக்கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் ஆனந்த், அமமுக – சிவபிரசாந்த், நாம் தமிழர் கட்சி – மேனகா நவநீதன் ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்த நிலையில், அதிமுக இன்னும் அறிவிக்கவில்லை.
இந்த நிலையில், ஈரோட்டில் அதிமுக பணிக்குழுவுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய செங்கோட்டையன், நாளை காலை தேர்தல் பணிமனை திறக்கப்படும் என்று அதன்பின் மகிழ்ச்சியான செய்தி அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு எப்போது என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் பதிலளித்தார்.
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…