முதல்வர்,துணை முதல்வர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து
தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு தான் வருகிறது. அந்த விழாக்களில் ஒன்று தான் தமிழ் புத்தாண்டு.நாளை தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது.இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் ,துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான பழனிசாமி சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில்,சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத் துலங்குக வையகமே தொல்லை வினைதரு தொல்லை யகன்று சுடர்க தமிழ்நாடே” என்று மகாகவி பாரதியார் பாடியதற்கேற்ப இன்று உலகை சூழ்ந்திருக்கும் இன்னல்கள் யாவும் தீர்ந்து பொய்யாகி புதுவாழ்வு மலர்ந்திட, அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளனர்.
மாண்புமிகு முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, மாண்புமிகு துணை முதல்வர் திரு. ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரின் ‘தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து செய்தி.#HappyTamilNewYear pic.twitter.com/NqKGKLOvLR
— AIADMK (@AIADMKOfficial) April 13, 2020