புத்தாண்டு – எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து!
இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வெற்றியை வழங்கட்டும் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி வாழ்த்து.
புலரும் புத்தாண்டு அனைவருக்கும் ஒரு இனிய சிறந்த துவக்கமாக இருக்கட்டும் என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இருளும், சோகமும் விலகி இருக்க புதிய ஆண்டு பிரகாசம், நம்பிக்கை நிறைந்ததாக இருக்கட்டும். நிறைந்த வளம், ஆரோக்கியம், மிகுந்த சந்தோசம், வெற்றியை இந்த இனிய புத்தாண்டு மக்களுக்கு வழங்கட்டும் எனவும் கூறியுள்ளார்.